Thursday, November 13, 2025

G

 “குருதேவரின்மீது எனக்கு இனம் புரியாத அன்பு ஏற்பட்டது. அவர் எனக்கு மிகவும் அறிமுகமானவர் போல் தோன்றியது. இனம் புரியாத மகிழ்ச்சி அலை என் இதயத்தில் புரண்டடித்தது. அவருக்குள் நான் அன்பான, மென்மையான, என்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்ற தாயைக் கண்டேன். எனவே நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும், சிறு குழந்தைக்கே உரிய எதிர்பார்ப்புடனும் அவரிடம் சரணடைந்தேன். என்னை முழுவதும் அவர் வசம் ஒப்படைத்துவிட்டேன். என் வாழ்நாள் முழுவதும் யாரைத் தேடிக் கொண்டிருந்தேனோ அவரிடம் நான் வந்து சேர்ந்துவிட்டதை அறிந்துகொண்டேன். அன்றுமுதல் நான் குருதேவரை என்னைப் பெற்ற தாயாகவே எண்ணத் தொடங்கினேன்.”